மாற்று ஏற்பாடுகளின்றி மக்கள் வெளியேற்றம் : குருநகர் நீதிமன்ற குடியிருப்பு பகுதியில் பதற்றம்!

Wednesday, June 6th, 2018

யாழ் நகரை அண்டிய குருநகர் பகுதியில் நீதி அமைச்சுக்கு சொந்தமான காணிகளில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் மக்களை முழுமையான மாற்று ஏற்பாடுகள் ஏதமின்றி வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பதற்றம் நிலவிக்காணப்படுகின்றது.

இது குறித்து தெரியவருவதாவது –

பல தசாப்த காலமாக குறித்த பகுதியில் தாங்கள் நிரந்தரமான வீடுகளை அமைத்து வாழ்ந்துவருவதுடன் பணங்கொடுத்தும் நிலங்களை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்த மக்கள் என்றோ ஒருநாள் தமக்கான காணிகளின் உரிமைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையில் 1992 ஆம் ஆண்டுகளிலிருந்து சோலைவரி உள்ளிட்ட  நிதிகளையும் துறைசார்ந்தவர்களிடம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது தங்களை குறித்த வாழ் நிலங்களிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்படுவதாகவும்  இதற்கிணங்க சிலர் காணிகள் கொள்வனவு செய்துள்ளமையால் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டமையால் அவர்கள் வீடுகள் அமைக்கப்பட்ட இடங்களுக்கு செல்லுமாறும் அறிவிக்கப்பட்டதுடன் இதுவரை காணிகள் அற்று மிக வறுமையில் வாழ்ந்தவரும் குடும்பங்கள் வெளியேறிச் சென்று வாழ்வதற்கான எதுவித ஏற்பாடுகளும் இன்றி இருப்பதால் அவர்களுக்கு நிரந்தர ஏற்பாடுகளை செய்து கொடுக்காது உடனடியாக குறித்த வாழிடங்களை விட்டு வெளியேறுமாறு இன்றையதினம் உத்தரவிடப்பட்டுள்ளமைக்கு இணங்க பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் மக்களது கோரிக்கைகளுக்கு அமைவாக குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பேச்சுக்களை மேற்கொண்டதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: