அதிக விலைக்கு வாகனங்களை வாங்க எந்த சூழ்நிலையும் ஏற்படவில்லை – ஓட்டோமொபைல் இறக்குமதியாளர்கள் சங்க தலைவர் தெரிவிப்பு!

Sunday, September 20th, 2020

அண்மையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் 90 சதவீதம் சமீப காலங்களில் திடீரென விற்கப்பட்டிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என்ற அச்சத்தில் மக்கள் திடீரென வாகனங்களை வாங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் கடந்த பருவத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே எஞ்சியுள்ளதாக இலங்கை ஆட்டோமொபைல் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சங்கத்தின் தலைவர் இந்திகா சம்பத் மெரெஞ்சி, திடீரென அல்லது அதிக விலைக்கு வாகனங்களை வாங்க எந்த சூழ்நிலையும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே வாகன சந்தையில் கிடைப்பதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: