எதிர்வரும் ஐந்தாம் திகதி இலங்கை – இந்திய மீனவர்கள் புதுடில்லியில் பேச்சுவார்த்தை!

Monday, October 31st, 2016

வட பகுதி மீனவர்களுக்கு இந்திய மீனவர்களினால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை – இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தையின் போது அந்நாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் ஐந்தாம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியாவை பிரதிநித்துவப்படுத்தி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மற்றும் அந்நாட்டு கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.றோலர் படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால், வடபகுதி மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் பொருளாதார ரீதியாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு இவற்றினை நிறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

இலங்கை – இந்திய பேச்சுவார்த்தைக்கு முன்னர் இந்திய – இலங்கை மீனவர்கள் சங்கத்தினருடனான கலந்துரையாடல் சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Map-SriLanka-ShippingLanes_0_0

 

Related posts: