புத்தாண்டு பாடல் திரிபுபடுத்தப்பட்டிருப்பது குறித்து விசாரணை – கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை!
Sunday, April 14th, 2024தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புத்தாண்டு பாடல் திரிபுபடுத்தப்பட்டிருப்பது குறித்து கலாசார அலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் ஆலோசனையின் பேரில் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரோஹன பெத்தகே பாடிய புத்தாண்டு பாடலே இவ்வாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த பாடலை திரிபுபடுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!
காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் நிறைவு!
மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!
|
|
|


