பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமில்லை – கட்சித் தலைவர்கள் முடிவு?

Thursday, February 22nd, 2018

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநித்துவ விகிதம் கட்டாயமில்லை என்று கட்சித்தலைவர்கள் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையில் பெண்களுக்கு 25 வீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது புதிய சட்டவிதியாகும்.

எனினும் இந்த சட்டவிதி காரணமாக பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் மற்றும் பட்டியல் உறுப்பினர்களை நியமிப்பதில் கட்சிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன.

இதன் காரணமாக பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான சரத்தை புறக்கணித்து செயற்படுவது என்றும் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் சாத்தியமற்றது என்ற முடிவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரும் இத்தீர்மானத்தை ஆதரித்துள்ளனர்.

Related posts: