இலங்கை நெருக்கடி புதுடெல்லியில் முக்கிய பேச்சு – கொழும்பிலிருந்து புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டனர் இந்திய அதிகாரிகள்!

Thursday, September 8th, 2022

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியாவில் உயர் மட்ட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலாய அதிகாரிகள் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி இரண்டு நாள் விஜயமாக இந்தியா வரும் சர்வதேச நாணய நிதிய தலைவர் திருமதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய பேச்சினை நடத்தவுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இலங்கை உட்பட தெற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடல்களுக்காகவே இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இந்தியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  

இதேநேரம்

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்தின் தலைவரும் அமெரிக்க இராஜ தந்திரியுமான சமந்தா பவர் நாளைமறுதினம் சனிக்கிழமை இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கவுள்ளதுடன், அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இதன்போது, இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: