நாட்டில் குளிருடன் கூடிய காலநிலை அதிகரிப்பு!

Monday, December 17th, 2018

வங்காள விரிகுடாவில் உருவாகிய “PHETHAI” என்ற சூறாவளியானது ஒரு பாரிய சூறாவளியாக வலுவடைந்து நேற்று(16) இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு வடக்கு வடகிழக்காக அண்ணளவாக 620 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 14.0N, கிழக்கு நெடுங்கோடு 82.5E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.

இத்தொகுதியின் தாக்கம் இன்றிலிருந்து படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் தமது நடவடிக்கைகளில் ஈடுபடும்போது இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படுவதோடு, பனி மூட்டமாகவும் இருக்கும் எனவும், குளிர் அதிகமாக காணப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: