புளோரிடாவில் அவசரகால பிரகடனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதி!

Wednesday, August 30th, 2023

அமெரிக்காவின் புளோரிடாவில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அங்கு நிலவும் அதிக காற்று, சூறாவளியாக மாற்றமடையக்கூடும் என அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த சூறாவளி தரை மட்டத்திலிருந்து 4.5 மீற்றர்வரை உயரத்தில் சில கடலோரப் பகுதிகளைத் தாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புளோரிடாவின் வளைகுடா கடற்கரையில் நிலச்சரிவும் ஏற்படக்கூடிய நிலைமை உள்ளதாக புளோரிடாவின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

பலத்த மழை மற்றும் சூறாவளியுடனான வானிலை கியூபாவில் நிலவிவருகின்றது.

புளோரிடாவில் அவசரகால பிரகடனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: