வடகொரியாமீது வர்த்தகத் தடைகளை அதிகரித்தது சீனா!

Wednesday, April 6th, 2016
வடகொரியா மீது ஐ.நா.விதித்துள்ள புதிய தடைகளுடன், சீனாவும் அந்நாட்டுடனான வர்த்தக நடவடிக்கைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவிலிருந்து தங்கம் மற்றும் அரிய உலோகங்களை இறக்குமதி செய்வதற்கு சீனாவின் வர்த்தக அமைச்சு தடை விதித்துள்ளது. அதேபோன்று ராக்கெட்டுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்வதையும் சீனா நிறுத்தியுள்ளது.

நான்காவது அணு ஆயுத பரிசோதனை, நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ராக்கெட் பரிசோதனை ஆகியவற்றை வடகொரியா மேற்கொண்டதையடுத்து அந்நாடு மீதான தடைகளை ஐ.நா. கடந்த மார்ச் மாதம் அதிகரித்தது.

சுரங்கத் தொழில் வடகொரியப் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. இந்தத் துறையில் சீனா அதன் பிரதான பங்காளியாக இருக்கிறமை குறிப்பிடத்தக்கது..

Related posts: