உலகக் கோப்பை காற்பந்து: அனுமதி வழங்கியதில் ஊழல்!

Wednesday, June 19th, 2019

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பிரான்ஸ் முன்னாள் கால்பந்து வீரருமான மைக்கேல் பிளாட்டினி பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கத்தார் நாட்டிற்கு 2022 உலகக் கோப்பையை நடத்த அனுமதி வழங்குவதில் ஊழல் மற்றும் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் 63 வயதான மைக்கேல் பிளாட்டினி கைது செய்யப்பட்டுள்ளார்.

மைக்கேல் பிளாட்டினி கைது செய்யப்பட்டு, அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் செய்தி பிரான்ஸ் ஊடகங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2015 வரை ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பில் பொறுப்பில் இருந்த பிளாட்டினி, பிபா-வின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டரிடமிருந்து இரண்டு மில்லியன் சுவிஸ் பிராங்க் பணம் பெறுவது உள்ளிட்ட நெறிமுறை மீறல்களுக்காக அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts: