வெள்ள அனர்த்தம் – தென்னாபிரிக்காவில் 60 பேர் உயிரிழப்பு!

Friday, April 26th, 2019

தென்னாபிரிக்காவின் டேர்பன் நகர் மற்றும் க்வாஸுலு நேட்டல் மாகாணம் என்பன வௌ்ள அனர்த்தத்தால் பாதிப்படைந்துள்ளது.

தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக, சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன

பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோஷா, 1000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்கள் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts:


பந்து அபாயகரமானது என்பதால் கிரிக்கெட்டை தடை செய்வீர்களா? சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி!
ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகித்ததாக ஈரான் ஒப்புதல் - யுக்ரைன் யுத்தத்துக்கு பல மாதங்களுக்கு முன்னர்...
அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது – இந்திய நிதியமைச்சர் ந...