ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகித்ததாக ஈரான் ஒப்புதல் – யுக்ரைன் யுத்தத்துக்கு பல மாதங்களுக்கு முன்னர் வழங்கியதாகவும் அறிவிப்பு!

Monday, November 7th, 2022

ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தான் அனுப்பியதாக ஈரான் முதல் தடவையாக இன்று ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு முன்னரே அவை அனுப்பப்பட்டவை என ஈரான் கூறியுள்ளது.

யுக்ரைன் யுத்தத்துக்கு பல மாதங்களுக்கு முன்னர், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஆளில்லா விமனங்களை ரஷ்யாவுக்கு நாம் விநியோகித்தோம் எனவும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைய்ன் அமீர் அப்தோலாஹியன் கூறினார் என ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ. செய்திச் சேவை தெரிவித்தது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக யுக்ரைனும் அதன் மேற்குலக நட்பு நாடுகளும் கூறிவந்தன. ஆனால் இதை ஈரான் நிராகரித்து வந்தது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட சுமார் 400 ட்ரோன்களை யுக்ரைனில் பொதுமக்களுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்துகிறது எனவும், மேலும் சுமார் 2000 ட்ரோன்களை வாங்குவதற்கு ரஷ்யா கட்டளை கொடுத்துள்ளது எனவும் யுக்ரைன் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: