ருமேனியாவில் முஸ்லிம் பெண் பிரதமரை நிராகரித்தார் ஜனாதிபதி!

Thursday, December 29th, 2016

ருமேனிய பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மைய இடதுசாரி சமூக ஜனநாயக கட்சியின் முஸ்லிம் பெண்ணை அந்நாட்டு ஜனாதிபதி கிளவுஸ் லொஹன்னிஸ் நிராகரித்துள்ளார்.

எனினும் ருமேனியாவின் முதல் பெண் மற்றும் முஸ்லிம் பிரதமரின் நியமனம் நிராகரிக்கப்பட்டதற்கு ஜனாதிபதி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 55 வயது செவில் ஷ்ஹெய்தே துருக்கி பூர்வீகம் கொண்ட நாட்டின் பலம்மிக்க 65,000 முஸ்லிம் சமூகத்தில் இருந்து வந்தவராவார்.

“எதிரான மற்றும் ஆதரவான அனைத்து தர்க்கங்களையும் ஆராய்ந்த பின்னர் இந்த பரிந்துரையை ஏற்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன்” என்று ஜனாதிபதியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷ்ஹெய்தேவுக்கு பதில் மற்றொரு வேட்பாளரை பரிந்துரைக்கும்படி சமூக ஜனநாயக கட்சிக்கு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு வெளியிட்டிருக்கும் சமூக ஜனநாயக கட்சி, ஜனாதிபதி லொஹன்னிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இம்மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சமூக ஜனநாயக கட்சி, கூட்டணி அரசொன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.

coltkn-12-29-fr-01152934440_5110618_28122016_MSS_CMY

Related posts: