தீர்வின்றி தொடரும் கொரோனா அச்சுறுத்தல் : ஒரே நாளில் ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று !

Saturday, April 25th, 2020

உலகில் நேற்று ஒரே நாளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 6 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்றும் மருத்துவத்துறைசார் தரப்பிரரை  ஆதாரம்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், ஐரோப்பியா, அமெரிக்காவில் அதிக உயிர்பலி எடுத்துவருகிறது. தற்போது ஐரோப்பியாவில் பலி எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் உலகில் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 6 ஆயிரத்து 69 பேர் பலியாயினர். இதனையடுத்து மொத்த பலி ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 986 ஆகவும், மொத்த பாதிப்பு 28 இலட்சத்து 27 ஆயிரத்து 47 ஆகவும் அதிகரித்தது. அத்துடன் இதுவரை 7 இலட்சத்து 98 ஆயிரத்து 295 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

இதே நேரம் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,863 பேர் பலியானதையடுத்து, அந்நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 52 ஆயிரத்து 97 ஆக உயர்ந்துள்ளதுர். அத்துடன் புதிதாக 37 ஆயிரத்து 370 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பும் 9 இலட்சத்து 23 ஆயிரத்து 812 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காலில் இதுவரை 1 இலட்சத்து 10 ஆயிரத்து 400 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் வட அமெரிக்க வலயத்தில் இதுவரை 9 இலட்சத்து 94 ஆயிரத்து 917 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 56 ஆயிரத்து 99 பேர் பலியாகி உள்ளனர். இங்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புள்ள நாடாக கனடா பதிவாகியுள்ளது. கனடாவில் இந்நோயால் இதுவரை 43 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

அதேநேரம் ஆபிரிக்காவில் அதன் பாதிப்பு குறைந்த அளவே உள்ளது. அமெரிக்காவில் மட்டும் தினமும் 2 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து வரும் நிலையில், ஆபிரிக்காவில் இதுவரை ஆயிரம் பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்.

ஆபிரிக்காவில் புதிதாக 1,608 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 30 பேர் பலியாயினர். இதனையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 29,825 ஆகவும், மொத்த பலி 1,328 ஆகவும் உயர்ந்தது.

ஆபிரிக்க வலயத்தில் தென் ஆப்ரிக்காவில் அதிகபட்சமாக 4,220 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எகிப்தில் 4,092, மொராக்கோவில் 3,758, அல்ஜீரியாவில் 3,127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.

இதேநேரம் ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 12 இலட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்தது.

ஐரோப்பாவில் கொரோனாவால், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் அதிக உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் ஐரோப்பாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 32,038 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 3,065 பேர் பலியாகினர். இதனையடுத்து ஐரோப்பாவில் மொத்த பாதிப்பு 12 இலட்சத்து 25 ஆயிரத்து 314 ஆக உயர்ந்தது. இதுவரை 3 இலட்சத்து 93 ஆயிரத்து 199 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இவற்றில் அதிகபட்சமாக ஸ்பெயினில், 2 இலட்சத்து 19 ஆயிரத்து 764 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 1 இலட்சத்து 92 ஆயிரத்து 994 பேரும், பிரான்சில்  ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 828 பேரும், ஜெர்மனியில் ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 999 பேரும்  பிரித்தானியாவில் 1 இலட்சத்து 43 ஆயிரத்து 646 பேரும், ரஷ்யாவில் 68 ஆயிரத்து 622 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கடந்த சில நாட்களாக ஐரோப்பியாவில் கொரோனா பாதிப்பும், உயிர்பலியும் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆசியாவில் கொரோனா பாதிப்பு 4 இலட்சத்து 47 ஆயிரமாக உயர்ந்துள்ளதுடன் , ஆசிய வலய நாடகளில் இதுவரை 16 ஆயிரத்து 586 பேர் பலியாகியும் உள்ளனர்.

ஆசியாவில் புதிதாக 12,596 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 374 பேர் பலியாகினர். இதனையடுத்து மொத்த பாதிப்பு 4,47,872 ஆகவும், மொத்த பலி 16,586 ஆகவும் அதிகரித்தது.

துருக்கியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக உயர்ந்தது. ஆசியாவில் அதிக பாதிப்புகளை துருக்கியில் ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 912 பேரும், ஈரானில் 88 ஆயிரத்து 194 பேரும், சீனாவில் 82 ஆயிரத்து 804 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் புதிதாக 59 பேர் பலியானதையடுத்து மொத்த பலி 780 ஆக உயர்ந்துள்ளது. 1,408 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 24,447 ஆக அதிகரித்துள்ளது.  அதுநேரம் பாகிஸ்தானில் 11,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 253 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: