போலந்திற்கு மேலும் ஆயிரம் துருப்பினர்? – அமெரிக்கா ஜனாதிபதி!

Friday, June 14th, 2019

போலந்திற்கு மேலும் ஆயிரம் துருப்பினரை அனுப்பவுள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

போலந்து ஜனாதிபதி அன்டசிச் டுடாவுடன்  இணைந்து ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார். ஜேர்மனியில் உள்ள 52 ஆயிரம் அமெரிக்க படையணியில் இருந்து  ஆயிரம் படையினர் போலந்திற்கு அனுப்பி வைக்கப்படுவர்.

படையணியினருடன் ஆளில்லாத வாநூர்தி மற்றும் இராணுவ தளபாடங்களும் அனுப்பி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலந்தின் வேண்டுகோழுக்கு இணங்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், அமெரிக்க துருப்பினர் நிரந்தரமாக அங்கு தங்கியிருப்பார்களா என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிடவில்லை.

இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் செலவில், போலந்தில் தளம் ஒன்றை நிர்மாணிக்க போலந்து நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

நேற்றையதினம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த போலந்து ஜனாதிபதி, போலந்தில் நிர்மாணிக்கப்படும் இந்த தளத்திற்கு ‘ட்ரம்ப் கோட்டை’ என பெயரிடப்படும் என தெரிவித்துள்ளார்.

போலந்து நேட்டோ அமைப்பில் இணைந்து 20 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள அதேவேளை, கம்யூனிச ஆட்சி 30 வருடங்களுக்கு முன்னர் வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: