அமெரிக்க தடை ஐநா ஆதரவு பெற்ற ஒப்பந்தத்துக்கு எதிரானது – ஈரான் கண்டனம்!

Sunday, February 5th, 2017

அமெரிக்கா விதித்துள்ள புதிய தடை நடவடிக்கைகளை கண்டித்துள்ளதோடு, இதற்கு பதிலடி நடவடிக்கையை தானும் எடுக்கப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஈரான் மேற்கொண்ட பேலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கும், பயங்கரவாதத்துக்கு தெஹ்ரானின் தொடர்ந்து அளிக்கும் ஆதரவு என்று அமெரிக்கா விவரித்திருக்கும் நடவடிக்கைக்கும் பதிலடியாக இந்த தடைகளை விதித்திருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

ஈரானின் அணு திட்டத்தை குறைப்பதற்கு இணைங்கியிருக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் ஆதரவு பெற்ற ஒப்பந்தத்தை மீறுவதாக இந்த தடைகள் அமைவதாக இரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

பிராந்திய தீவிரவாத குழுக்களுடன் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படும் அமெரிக்கர்கள் மற்றும் நிறுவனங்கள் சிலவற்றின் மீது சட்ட வரையறைகளை விதிக்க போவதாக ஈரான் கூறியிருக்கிறது.

ஈரானிலும், பிற இடங்களிலும் இருக்கின்ற 12 நிறுவனங்கள் மற்றும் 13 தனிநபர்களுக்கு எதிரானதாக விதித்திருக்கும் தடைகள் அமைவதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

donald-trump-iran-deal-c

Related posts: