பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்!

Sunday, August 20th, 2017

பசிபிக் பெருங்கடலில் பல குட்டித்தீவுகள் அமைந்துள்ளன. அதில் நியூசிலாந்து நாட்டுக்கு அருகிலுள்ள டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் பெருங்கடலிலிருந்து 500கி.மீ தொலைவில் இத்தகைய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அதிர்வில் கட்டடங்கள் குலுங்கியுள்ளன. ஆனாலும் மிதமான அதிர்வினால் வீடுகளிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேறினர்.

சில நேரமே நீடித்த இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனாலும், தீவின் கட்டமைப்பு இழப்புகள், உயிர் இழப்புகள் இதுவரையில் முழுமையாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதிகாலையில் ஏற்பட்ட  நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது வரையில் உடனடி சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: