பதட்டமான சூழலில் ஹோங்கொங் வந்துள்ள சீன தலைவர்!

Wednesday, May 18th, 2016

ஹோங்கொங்கில் கடந்த 2014-ஆம் ஆண்டில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நடந்த போராட்டத்துக்கு பிறகு முதல் முறையாக சீன தலைவர் ஜாங் டிஜியாங்க், ஹாங்காங் வந்துள்ளதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஹோங்கொங்கில் உள் விவகாரங்களில் பெய்ஜிங் தலையிடுகிறது என்ற அதிருப்திக்கு மத்தியில், ஹோங்கொங் விவகாரங்களுக்கு பொறுப்பாக கருதப்படும் ஜாங் டிஜியாங் ஹோங்கொங் வந்தடைந்தார்.

சமூகத்தின் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்பதற்கு தான் ஹோங்கொங் வந்துள்ளதாக ஜாங் தெரிவித்தார்.

ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டக் குழுவினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள சூழலில், ஆறாயிரத்துக்கும் அதிகமான போலீசார் காவல் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஹோங்கொங் சென்ற சீன தலைவர் ஜாங் தனது 5 நிமிட உரையில் ” ஹோங்கொங் மக்களுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார். மேலும், சீன மைய அரசு மற்றும் மக்களின் அக்கறையோடு, தான் ஹோங்கொங் வந்துள்ளதாக ஜாங் தெரிவித்தார்.

Related posts: