பிலிப்பைன்ஸை தாக்கியது சக்தி வாய்ந்த சூறாவளி – 16 பேர் பலி!

Monday, November 2nd, 2020

பிலிப்பைன்ஸை தாக்கிய கோனி சூறாவளியால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதோடு, 7 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதேவேளை மூன்று பேர் காணாமல் போயுள்ளார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் லூசன் தீவு மாகாணத்தின் பிகோல் பிராந்தியத்தில் உள்ள கேடான்டுவானஸ் மற்றும் அல்பேவில் கோனி சூறாவளி கரை கடந்தது.
இதனால் மணிக்கு 310 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. காற்றின் தாக்கத்தினால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
சூறாவளியின் தாக்கத்தினால் பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அல்பே மாகாணத்தில் உள்ள மயோன் எரிமலையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 இலட்சத்து 90 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 இலட்சத்து 45 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்னர் பிலிப்பைன்ஸை தாக்கிய மொலேவ் சூறாவளியால் 23 உயிர்ழந்ததோது, 39 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: