இரு வாரங்களில் 80 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார நிறுவனம் சாதனை!

Sunday, September 4th, 2016

காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள சுமார் 80 லட்சம் மக்களுக்கு இருவாரங்களுக்குள், மஞ்சள் காய்ச்சல் நோய்க்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

காங்கோ ஜனநாயக குடியரசின் தலைநகரான கின்ஷாசாவில் நடைபெற்ற பிரசாரத்தில், மிக விரைவாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, குறுகிய காலத்திற்கு மருந்தின் சாதாரண அளவில் இருந்து ஐந்து சதவீதம் மட்டுமே அவசரகால நடவடிக்கையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் அங்கோலாவில் 400-க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காய்ச்சலால் பலியாகி உள்ளனர்.

இருநாடுகளிலும், மஞ்சள் காய்ச்சல் நோயின் திடீர் பரவல் தணிந்துள்ளதாகவும், தொடர்ந்து தடுப்பூசி வழங்கும் பணி நடந்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

160412221309_angola_yellow_fever_950x633_epa_nocredit

Related posts: