திடீர் கோடீஸ்வரரானார் விவசாயி !

Wednesday, December 6th, 2017

தனது பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பைக் கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரரான சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

51 வயதான விவசாயி தனது பண்ணையில் உள்ள விவசாய நிலத்தில் விதை விதைப்பதற்காக உழுதபோது    வித்தியாசமான கல் போன்ற பொருள் ஒன்று கிடைத்துள்ளது.

அக்கல்  4 அங்குல நீளமும், 2.5 அங்குல அகலமும் அடர்த்தியான ரோமங்களாலும் மூடி  இருந்தது. அதன் விவரங்கள் தெரியாமல் தனது நண்பர்களிடம் அறிந்த பின்னர்,  பன்றியின் பித்தப்பையில் உருவாகிய ‘கல்’ என்பது தெரிய வந்தது.

எனவே அவர் கண்டுபிடித்த கல்  8 கோடியே 70 லட்சம்  ரூபாய்  விலை போகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் திடீர் கோடீஸ்வரர் ஆகி விட்டார் என்பது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கோரோசனை  என்று அழைக்கப்படும் இந்த பித்தக்கல், பலவிதமான நோய்களையும் தீர்க்கும் மருந்து என்பதோடு,  உடலில் சுரக்கும் நச்சுகளை வெளியேற்றும் தன்மை உடையது என்பதால் இது மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: