ஜோ பைடனை ரஷ்ய ஜனாதிபதி உட்பட உலக தலைவர்கள் பொருட்படுத்துவதில்லை – அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் சுட்டிக்காட்டு!

Monday, February 19th, 2024

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை, ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின் உட்பட உலக தலைவர்கள்,பொருட்படுத்துவதில்லை என அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான Alexei Navalnyயின் மரணம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த மரணம் புடினின் பலவீனத்தை காட்டவில்லை எனவும் கூறியுள்ளார்.

இப்படியான சம்பவம் ஒன்றின் பின்னரும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எதிர்ப்புக்கு உள்ளாகாமல் செயற்படலாம் என்ற நம்பிக்கை புடினுக்கு இருப்பதே இதற்கு காரணம் எனவும் போல்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராக ஜோ பைடன் எடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக அந்த நாடு மேலும் வலுவடைவது மட்டுமே நடக்கும்.

இதேநேரம் ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்பதுடன் உக்ரைன் பொருளாதாரம் மிகவும் பலவீனமான இடத்தை நோக்கி சரிந்துள்ளது.

அதேவேளை மிகப் பெரிய போர் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக பைடன் கடுமையான தீர்மானங்களை எடுக்கவில்லை. இதனால், அவர் பலவீனமான தலைவர் என்று பிரபலமடைந்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கியதன் மூலம் அமெரிக்காவின் பலவீனத்தை காட்டினார். இதன் மூலம் விளாடீமிர் புடினுக்கு உக்ரைன் மீதான போரை ஆரம்பிப்பதற்கான நம்பிக்கையை உருவாக்கிக்கொடுத்தது.

அத்துடன் ஜோ பைடனின் தலைமைத்துவம் காரணமாக சீனா, வடகொரிய போன்ற நாடுகளும் அமெரிக்காவை பெரிதாக பொருட்படுத்தவில்லை எனவும் ஜோன் போல்டன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து கருத்து வெளியிட்டுள்ள போல்டன், ட்ரம்ப் நேட்டோவுடன் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வது போன்ற விடயங்கள் மோசமான நிலைமை எனக்கூறியுள்ளது. அத்துடன் ட்ரம்புக்கு பாதுகாப்பு தொடர்பில் சரியான நிலைப்பாடுகள் இல்லை. அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானால், பாரதூரமான சிக்கல்கள் உருவாகும் எனவும் போல்டன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போர் தொடர்பான விடயத்தில் ஆர்வம் கொண்டவர் என கருதப்படும் ஜோன் போல்டன், டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியின் கீழ் சில காலம் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

000

Related posts: