கனேடிய இளம் பெண்ணைக் கொன்ற குற்றவாளிக்கு 100 ஆண்டுகள் சிறை!

Thursday, April 20th, 2017

கனடா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

கனடாவில் உள்ள கியூபெக் நகரை சேர்ந்த Audrey Carey (23) என்ற இளம்பெண் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நகரில் உள்ள முகாம் ஒன்றில் தங்கியிருந்தபோது மூன்று நபர்கள் அவரிடம் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது இளம்பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு தினங்களுக்கு பிறகு Steve Carter என்ற யோகா ஆசிரியரையும் அதே மூன்று பேர் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த இரட்டை கொலை தொடர்பாக பொலிசார் விசாரணை தொடங்கியபோது மூவரும் கைது செய்யப்பட்டனர்.மூவருக்கும் வீடு இல்லாத காரணத்தினால் இப்பகுதிக்கு வருபவர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது.

இந்த இரட்டைக் கொலை தொடர்பான இறுதி விசாரணை சான் பிரான்சிஸ்கோ நகர் நீதிமன்றத்திற்கு நேற்று வந்துள்ளது.அப்போது, மூவர் மீதான குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, இரட்டைக் கொலையில் முதல் குற்றவாளியான Morrison Lampley(24) என்ற நபருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

பின்னர், இரண்டாவது குற்றவாளியான Lila Alligood(19) என்பவருக்கு 50 ஆண்டுகளும், மூன்றாவது குற்றவாளியான Sean Angold(25) என்பவருக்கு 15 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Related posts: