முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 155 ஓட்டங்கள்!
Friday, March 17th, 2023
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி சார்ப்பில் விளையாடிய டெவோன் கான்வே 78 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தனஞ்சய டி சில்வாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டொம் லதமின் விக்கெட்டை கசுன் ராஜித கைப்பற்றினார்.
முதல் நாள் முடிவில் ஆட்டமிழக்காத கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களையும், ஹென்றி நிக்கோல்ஸ் 18 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முத்தரப்புத் தொடராகின்றது டெஸ்ட் போட்டி?
சிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் விடோரிக்கு ஓராண்டு தடை!
அதிரடி மாற்றங்களோடு இங்கிலாந்தை எதிர்கொள்ளும் ஆவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு!
|
|
|


