அதிரடி மாற்றங்களோடு இங்கிலாந்தை எதிர்கொள்ளும் ஆவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு!

Friday, January 5th, 2018

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 14ம் திகதி மெல்போர்னில் ஆரம்பமாகிறது. இந்த தொடருக்கான அவுஸ்திரேலிய அணியை அறிவித்துள்ள கிரிக்கெட் சபை, அதிரடி துடுப்பாட்ட வீரர் கிளேன் மெக்ஸ்வலை அணியிலிருந்து நீக்கியுள்ளது.

கிளேன் மெக்ஸ்வல் இறுதியாக விளையாடிய 21 ஒருநாள் போட்டிகளில் 20.68 என்ற சராசரியில் ஓட்டங்களை பெற்று, மோசமான போர்மில் இருப்பதனால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார்.

 “மெக்ஸ்வலிடமிருந்து தொடர்ச்சியாக ஓட்டங்களை குவிக்கும் துடுப்பாட்டத்தை எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து சிறப்பாக பயிற்சிசெய்து, தனது துடுப்பாட்ட வலுவை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அது அவர் அணியில் இணைய வாய்ப்புகளை ஏற்படுத்தும். மெக்ஸ்வலின் பயிற்சிகளை அவதானித்தோம். அவர் இன்னும் சற்று சிறப்பாக பயிற்சிசெய்ய வேண்டும். அவரால் வேகமாகவும், மிகவும் புதுமையான ஷாட்களை ஆடமுடியும். எனினும் அவர் மைதானத்தில் துடுப்பெடுத்தாடும் நேரத்தை அதிகரிப்பதற்கு, பொறுமையுடன் துடுப்பெடுத்தாடினால் அவர் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராக உருவெடுப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய குழாம்

ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), டேவிட் வோர்னர், பெட்ரிக் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், ஜோஷ் ஹஷல்வூட், மார்க்கஸ் ஸ்டோனிஸ், என்ரு டை, அடம் சாம்பா, டிராவிஸ் ஹெட், கிரிஸ் லின், மிச்சல் மார்ஷ், டிம் பெயின், மிச்சல் ஸ்டார்க்

Related posts: