விடைபெறுகிறார் ஆஷிஸ் நெஹ்ரா!

Thursday, November 2nd, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா இன்று நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் டி20 போட்டியுடன் ஓய்வு பெறவிருக்கிறார்.

இந்திய அணியில் அதிக அணித்தலைவர்களுக்கு கீழ் விளையாடிய ஒரே வீரர் நெஹ்ரா ஆவார். கடந்த 1999ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நெஹ்ரா அறிமுகமானார்.

வேகப்பந்து வீச்சாளருக்குரிய எந்த அடையாளமுமே இல்லாத இவர் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பந்து வீசக் கூடிய திறமை கொண்டவர்.38 வயதாகும் நெஹ்ரா, தனது 18 ஆண்டு கிரிக்கெட் வாழ்வில் பல காயங்களை சுமந்துள்ளார். உடல் முழுதும் ஏற்பட்ட காயங்களால் இதுவரை 12க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டுள்ளார்.

அத்துடன் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் பல முறை புறக்கணிக்கப்பட்டபோது மனதளவிலும் பல காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.டெல்லியில் தனது முதல் போட்டியில் விளையாடிய நெஹ்ரா அதே டெல்லியில் இன்று தனது கடைசி போட்டியிலும் விளையாட உள்ளார்.முன்னாள் இந்திய அணித் தலைவர் அசாருதீனின் தலைமையின் கீழ் அறிமுகமான நெஹ்ரா, அதன் பின்னர் கங்குலி, டிராவிட், அனில் கும்ப்ளே என பல அணித்தலைவர்களின் தலைமையில் விளையாடி இறுதியாக விராட் கோஹ்லியின் கீழ் விளையாட உள்ளார்.இவர் விடைபெற இருக்கும் இந்த போட்டியிலேயே ஷ்ரேய்ஸ் ஐயர் மற்றும் முகமது சிராஜ் என்னும் வீரர்கள் அறிமுகமாக இருப்பது சிறப்பம்சமாகும்.

கிரிக்கெட் உலகில் எனக்கு காயங்கள் ஏற்படவில்லை. காயங்களில் தான் என் உடலே இருக்கிறது என்று கூறியுள்ள நெஹ்ரா நேற்று பயிற்சியில் ஈடுபடாததால் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது. எனினும் 90-களில் அறிமுகமாகி விடைபெற இருக்கும் ஒரே வீரர் இவர்தான்

Related posts: