சிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் விடோரிக்கு ஓராண்டு தடை!

Wednesday, December 28th, 2016

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி பந்து வீசிய பிரச்சினையில் சிக்கியுள்ள நிலையில் அவருக்கு பந்து வீச ஓராண்டு தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ளது.

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 26 வயதான பிரையன் விடோரி. இவர் கடந்த பெப்ரவரி மாதம், பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கி, இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு தனது பந்து வீச்சு முறையில் சில மாற்றங்களை செய்து, மீண்டும் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) ஜூன் மாதம் அனுமதி பெற்றார்.

இந்நிலையில் கடந்த மாதம் சொந்த மண்ணில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர். அவரது பந்து வீச்சை ஆய்வு செய்த போது, விதிமுறைக்கு புறம்பாக அவரது முழங்கை 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளைவது கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டு இடைவெளியில் 2-வது முறையாக விதிமுறைக்கு புறம்பாக பந்து வீசிய பிரச்சினையில் மாட்டியிருப்பதால் அவருக்கு பந்து வீச ஓராண்டு தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்திருக்கிறது. தடை காலம் முடிந்த பிறகு, மீண்டும் தனது பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்தி அவர் நிவாரணம் பெறலாம்.

vitory (1)

Related posts: