வெற்றியை நோக்கி இலங்கை அணி!

Wednesday, November 2nd, 2016

 

சிம்பபாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் திமுத் கருணாரத்னவின் சதத்தின் உதவியுடன் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது. கருணாரத்னவின் 4ஆவது டெஸ்ட் சதமாகும்.

இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய திமுத் கருணாரத்தின ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் குஷால் சில்வா 7 ஓட்டங்களையும் குஷால் பெரேரா 17 ஓட்டங்களையும் மென்டிஸ் 19 ஒட்டங்களையும் முதல் இன்னிங்ஸில் சதம் பெற்ற உப்புல் தரங்க ஒரு ஓட்டத்துடனும் தனஞ்சய டி சில்வா 48 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி 388 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டி சிம்பாப்வே கிரிக்கெட் வரலாற்றில் அந்த அணி விளையாடும் 100 வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.சிம்பாப்வே அணி தங்களது முதல் இன்னிங்சில் அணித்தலைவர் கிரீமரின் கன்னி சதத்தின் துணையுடன் வலுவான 373 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது.

கிரீமர் ஆட்டம் இழக்காது 102 ஓடடங்களையும், பிட்டர் மூர் 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க,இலங்கை அணியின் பந்து வீச்சில் லக்மால், ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி குசல் ஜனித் பெரேரா, உப்புல் தரங்க ஆகியோரின் சதத்தின் துணையுடன் 537 ஓட்டங்கள் குவித்தது. குசல் ஜனித் பெரேராவுக்கு முதல் சதமாகவும்,தரங்கவின் 2 வது டெஸ்ட் சதமாகவும் இந்த போட்டியில் பெற்ற சதங்கள் பதிவாகின.

சிம்பாப்வே அணி 3 ம் நாள் ஆட்டத்தின் போது சகல விக்கெட்டுக்களை இழந்து 373 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்களை பெற்றது.

25col4170175748479_4964451_01112016_aff_cmy

Zimbabwe's batsman Hamilton Masakadza (L) survives a run out attempt by wicket keeper Kusal Janith Perera (C) during the fifth day of the test cricket match between Sri Lanka and Zimbabwe at the Harare Sports Club in Harare, on November 2, 2016. This is Zimbabwe's 100th test match since their international debut in 1992. / AFP / Jekesai Njikizana        (Photo credit should read JEKESAI NJIKIZANA/AFP/Getty Images)

Related posts: