உலகிலேயே அதிவேகமான சீனாவின் கணினி!

Tuesday, June 21st, 2016

உலகின் அதிவேகமான கணினி என்று சீனாவின் அதிசக்தி கணினி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா இந்த பெருமையை ஏழாவது முறையாக பெறுகிறது. ஆனால், சீனாவில் தயாரான கணினி இயக்கிகளை (processors) மட்டுமே பயன்படுத்தித் தயாராகி வெற்றி கண்ட முதல் அதிசக்தி கணினி இது என்பது குறிப்பிடத்தக்கது.

வானிலை முன்னறிவிப்பு மற்றும் அணு ஆயுதங்கள் வடிமைப்பு போன்ற சிக்கலான வேலைகளை துரிதமாக செய்துமுடிக்க அதிசக்தி இயங்கு திறன் கொண்ட கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதுபோன்ற கணினிகளை உருவாக்குவது சீன அரசாங்கத்திடம் மிகப்பெரிய நிதி உதவிகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts: