வாட்ஸ்அப் மெசேஞ்சரில் இடம்பெறவுள்ள மாற்றம்

Wednesday, December 13th, 2017

வாட்ஸ் அப்  செயலியில் உள்ள குரூப் சாட்டிங்கில் தனியாக ஒரு நபரிடம் மட்டும் பேசும் வசதியை புதிய அப்டேட்டில் இணைக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. உலகெங்கும் வாழும் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் அரட்டை அடிக்கும் செயலி என்ப்படும் வாட்ஸ் ஆப் மொபைல் செயலி தொடர்ச்சியாக பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.

 இந்த வகையில் குரூப் சாட்டிங்கில் தனி ஒரு நபருக்கு மட்டும் தெரியும் வகையில் மெசேஜ் அனுப்ப உதவும் Reply Privately என்ற புதிய மேம்படுத்தப்பட்ட வசதியை விரைவில் இணைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் PIP (Picture in Picture) என்ற வசதியும் கிடைக்க உள்ளது. வாட்ஸ்அப்பில் ஏதேனும் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே மெசேஜ் மூலமும் அரட்டை அடிக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை பார்க்கும் வண்ணமாக அமையும்.

மேற்குறிப்பிட்ட வசதிகள் பரிசோதனை செயலியில் (Beta Version) பயனாளர்கள் சிலருக்கு மட்டுமே தற்போது கிடைக்கிறது. விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் பயன்படுத்தும் வகையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: