தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தும் ஜப்பான்!

Saturday, June 4th, 2016

இலங்கைத் தீவில் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த ஜப்பானின் உதவி நாடப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டு தொழில் நுட்பங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் நோக்கிலே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இலங்கைத் தீவில் எதிர்காலத்தில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அந்த நாட்டு அமைச்சர் mineyuki fukuda மற்றும் JICA நிறுவனத்துடன் அமைச்சர் ஹரின் பெரனாண்டோ பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் ஹரினின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய டிஜிட்டல் மாற்றம் குறித்து மகிழ்ச்சியடைந்த ஜப்பானிய அமைச்சர், அதற்கு பூரண ஆதரவு வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.

Related posts: