கலக்ஸி நோட் 7 கைபேசி திரும்பப் பெறப்படுவதால் சுமார் மூன்று பில்லியன் டாலர்களை இழக்கும் சாம்சங்!

Friday, October 14th, 2016

சாம்சங் கலக்ஸி நோட் 7 கைபேசி தீ பிடிக்கும் பாதிப்புக்கு உள்ளாவதை அடுத்து , அந்தப் போன்கள் திரும்பப் பெறப்படுவதால், அடுத்த ஆறு மாதங்களில் தனது இலாபத்தில் சுமார் மூன்று பில்லியன் டாலர்களை தான் இழக்க உள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது .

இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், தனது லாபத்தில் சுமார் இரண்டு பில்லியன் டாலர்கள் குறையும் என்று புதன் அன்று சாம்சங் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த சமீபத்திய எச்சரிக்கை வந்துள்ளது.போன்களை திரும்பப் பெறும் நடவடிக்கையால் ஏற்படும் நேரடிச் செலவுகளும், இரண்டரை மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் திரும்ப கொடுக்க வேண்டிய பணமும் அடங்கும் இந்த நஷ்டத்தில் அடங்கும்.

இந்த வார தொடக்கத்தில், சாம்சங் நிறுவனம், கேலக்ஸி நோட் 7 திறன்பேசியின் பேட்டரியில் உள்ள பிரச்சனையால், பல போன்கள் தீ பிடிக்கும் சம்பவங்கள் நேர்ந்ததால், நோட் 7 தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்தது.

_91922123_gettyimages-585210900

Related posts: