கியுபாவில் கால்பதிக்கும் கூகுள் நிறுவனம் !

Wednesday, December 14th, 2016

அமெரிக்காவில் தலைமையகத்தை கொண்டுள்ள கூகுள் நிறுவனம் கியுபாவில் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான ஒப்பந்தத்தை எடெக்ஸா ( ETECSA ) என்ற கியுபாவின் அரசாங்கம் தொலைத்தொடர்பாடல் நிறுவனமும் கூகுளும் கைச்சாத்திட்டுள்ளன.

மிக வேகமான முறையில் இணைய சேவையைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.  கூகுள், ஜிமெயில், யூ-ரியுப் என்பனவற்றை விரைவாக செயற்படுத்தும் வாய்ப்பும் இதன் மூலம் கியுபா மக்களுக்கு கிடைக்கும் என்று அந்நாட்டு ஊடகங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றது.

f4181490f8aea8121f67629a7152600b_XL

Related posts: