விவசாயத்தின் அடுத்த புரட்சி : வருகின்றது ஓட்டுநரில்லா ட்ராக்டர்!  

Friday, October 14th, 2016

பிரித்தானிய நிறுவனம் ஒன்று ஓட்டுநர் இல்லா ட்ராக்டர்களை முதல் முறையாக உருவாக்கியுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளும் இவற்றை பயன்படுத்தினால் பிரித்தானியாவில் மேலதிகமாக ஒரு லட்சத்து அறுபதாயிரம் ஏக்கர் நிலத்தை கூடுதலாக விளைநிலங்களாக மாற்றலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

எந்த பொருளிடமிருந்தும் ஒரே ஒரு அங்குலம் வரை நெருங்கிச் செல்லும் அளவுக்கு மிகத்துல்லியமாக இவை பயணிக்கவல்லவை.அதிகரிக்கும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவுப்பொருட்களை இருக்கும் நிலத்திற்குள்ளாகவே உருவாக்க வேண்டிய நெருக்கடிக்கு இதுபோன்ற உபகரணங்கள் புதிய தீர்வுகளை உருவாக்கும் என்கிறார்கள் இதனை உருவாக்கியவர்கள்.

p04bx7dn

Related posts: