வரைபடமாக வறுமையை குறிக்கும் வழி – விஞ்ஞானிகளின் புதிய முயற்சி!

Friday, August 19th, 2016

செயற்கைக்கோள் தகவல்களை வைத்து வறுமையை வரைபடமாகக் குறிக்க வழி கண்டறிந்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து ஆஃப்ரிக்க நாடுகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை கொண்டு அதிலுள்ள சாலைகள் மற்றும் கட்டிடங்களை வைத்து அந்நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தை அளக்க ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு கணினி அமைப்பை பயன்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் திரட்டப்பட்ட தகவல்களை பாரம்பரிய முறையான கருத்து கணிப்புகள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், கணினி வழிமுறை மூலம் கிடைத்த தகவல் அதே அளவு சரியாக இருப்பதையும், வறுமை மிகுந்த பகுதிகளை துல்லியமாகக் காட்டியதையும் கண்டறிந்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பானது, தேவையான இடங்களில் உதவிகளை எடுத்து செல்ல தொண்டு நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

Related posts: