2050ஆம் ஆண்டில் அதிகமானோருக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காது?

Monday, July 18th, 2016

 

தற்போதைய காலநிலையால் எதிர்வரம் காலங்களில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு வரும். 2050-ஆம் ஆண்டில் இந்தியாவில்,உயிர் வாழும், பத்து பேரில், ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்காது என மத்திய சிறு மற்றும் குறுந்தொழில் இணை அமைச்சர் கிரிராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள கெட்டிசெவியூர் அருகே பனை சீனி மற்றும் பனை பொருட்கள் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிறுவனம் பதனீரை கொள்முதல் செய்து, பனை சீனி (சர்க்கரை) தயாரிக்கிறது. மத்திய சிறு மற்றும் குறுந்தொழில் இணை அமைச்சர் கிரிராஜ் சிங், இந்நிறுவனத்தை நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: பனை சார்ந்த பொருட்களை பயன்படுத்தினால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இவற்றை மதிப்பு கூட்டி, சீனி உற்பத்தியும் செய்யலாம். இயற்கையாக நமக்கு மழை நீர் மூலம் கிடைக்கும் தண்ணீரை நல்ல முறையில் பயன்படுத்த கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

வரும் கால கட்டங்களில், தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு வரும். 2050-ஆம் ஆண்டில் இந்தியாவில்,உயிர் வாழும், பத்து பேரில், ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்காது.

அந்தளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு வரும். சர்க்கரை ஆலைகளில், தண்ணீர் அதிகமாக செலவாகும். ஆனால், பனை சார்ந்த பொருட்களில், சர்க்கரை தயாரிக்க அதிகம் தேவைப்படாது. காமராஜர் முதல்வராக இருந்தபோது, 1967-இல் குன்னத்தூரில் பதனீர் மற்றும் சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு நலவாரியம் ஏற்படுத்தினார்.

இன்றைய சூழலில், கரும்பு சர்க்கரை ஆலைகளின் ஆதிக்கத்தாலும், மக்களின் மோகத்தாலும், பனை தொழில் நலிவடைந்து விட்டது. இந்த தொழிலை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். பனை தொழில் குறித்து விரிவான அறிக்கை தயாரித்து, தமிழக முதல்வரிடம் கூறி இத்தொழில் புத்துயிர் அளிக்க பரிந்துரை செய்வேன் என கூறியுள்ளார்.

Related posts: