நான்கு கால்களுடைய திமிங்கிலம் : வெளியானது புதிய ஆதாரம்!

Friday, April 12th, 2019

திமிங்கிலங்கள் உட்பட டொல்பின் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் தரையில் வாழ்ந்து பின்னர் கடலுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இதற்கு வலுவூட்டும் வகையில் புதிய ஆதாரம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது நான்கு கால்களை உடைய திமிங்கிலங்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரமே அதுவாகும்.

இதனால் திமிங்கிலங்கள் தரையிலும், கடலிலும் வாழ்வதற்கான ஆற்றலைக் கொண்டிருந்திருக்கலாம் எனவும் நம்புகின்றனர்.

திமிங்கிலங்கள் 50 மில்லியன் வருடங்களுக்கு தோற்றம் பெற்றதாக இதுவரை கருத்து நிலவி வந்தது.

எனினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள திமிங்கிலத்தின் படிமமானது 53 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: