விலங்குகளால் கட்டப்பட்ட வீடு

Tuesday, April 19th, 2016

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முழுக்க முழுக்க விலங்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீட்டை கட்டி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த மிட்செல் வில்ஹொய்த் என்பவருக்கு சின்ன வயதில் இருந்தே விலங்குகள் மீது தீரா காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தி ஆஃப்ரிக்கன் குயின் திரைப்படத்தை பார்த்து வியந்த மிட்செல் படத்தில் வருவது போன்ற வீட்டை கட்ட தீர்மானித்தார்.

இதையடுத்து மிஸ்சோரி மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் பகுதியில் விலங்குகளின் தோல்கள், எச்சங்கள், உடல் பாகங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்ட வீட்டை கட்டி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார். வீட்டின் முகப்பிலேயே யானையின் சிலையை செதுக்கியுள்ள அவர், யானையின் தந்தங்கள் ஏனைய விலங்குகளில் கொம்புகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்ட பொருட்களை வீடு முழுவதும் குவித்து வைத்துள்ளார்.

மேலும் சிங்கம் ஒன்றின் பதப்படுத்தப்பட்ட உடலையும் வீட்டில் வைத்துள்ளார். அதேபோன்று பளபளக்கும் மொசைக் தரையின் நடுவில் இறந்து போன முதலையின் உடலையும் பதப்படுத்தி வைத்துள்ளார். 150 வருடங்கள் பழமை வாய்ந்த மரப்பொருட்கள், 55 மில்லியன் ஆண்டுகள் பழமையான diplomystus என்ற மீன் வகையின் எச்சம், ஒட்டகச்சிவிங்கியின் தோலால் செய்யப்பட்ட தரை விரிப்பு என ரசித்து ரசித்து இந்த வீட்டை அவர் கட்டியுள்ளார்.

தான் இறந்தால் இந்த வீட்டில் உள்ள கண்ணாடி தரையில் தன்னை புதைக்கவேண்டும் என்றும் அவர் கூறி வந்தார். இந்நிலையில் தற்போது இந்த வீட்டை விற்க மிட்செல் முடிவு செய்துள்ளார். வீட்டை 15 மில்லியன் டொலருக்கு விற்கவுள்ளதாக Ebay விற்பனை தளத்தில் விளம்பரம் வெளியிட்டுள்ளார்.

Related posts: