பாலைவன சோலையாய் செரபியம் காடு-மனிதனின் சக்திக்கு உதாரணமாகியது!

Thursday, September 8th, 2016

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இருந்து 2 மணி நேர பயணத்தில் செரபியம் காட்டினை அடைந்துவிட முடியும்.

சுமார் 340 ஹெக்டெயரில் பரந்து விரிந்துள்ள இந்தக் காடு, சுற்றுச்சூழலின் அதிசயமென்றால் அது மிகையாகாது.பாலைவனத்திலோர் சோலையாய் அமைந்துள்ள இக்காட்டில் சொந்த மண்ணின் மரங்களும் அந்நிய மரங்களும் செழித்து வளர்ந்து வனப்புடன் காணப்படுகின்றன.

பாலைவனமாதலைத் தடுக்கும் முயற்சியில் இறங்கிய ஆய்வாளர்களின் அற்புத செயற்பாடுதான் இந்த செரபியம் காடு.ஆண்டுக்கணக்கில் மழையில்லாமல் காணப்படும் நிலம் நாளடைவில் பாலைவனமாகிவிடும். பாலைவனமாதலைத் தடுக்க ஆய்வாளர்கள் புதியதொரு உத்தியைக் கையாண்டனர்.

நகரங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஓரளவு சுத்திகரித்து, நீண்ட குழாய்களின் உதவியுடன் பாலை நிலத்திற்கு அனுப்புகின்றனர்.அந்த நீர் அங்கு நாட்டப்பட்ட மரங்கள் மற்றும் செடிகளைச் சென்றடைகின்றது.

ஓரளவு சுத்திகரிக்கப்பட்ட நீர் என்பதால் மரங்கள், செடிகளுக்கு பாதிப்பில்லை. ஆனால், மனிதன் இந்நீரைப் பயன்படுத்த முடியாது.இந்த நீரைக் கொண்டு வளரும் மரங்களிலிருந்து பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை.கழிவு நீரில் இருக்கும் சத்துக்களும் சூரிய ஒளியும் செரபியம் காடுகளை வேகமாக வளர வைக்கின்றன.

15 ஆண்டுகளில் மரம் வெட்டக்கூடிய அளவுக்கு வளர்ந்து விடுகிறது. மரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.செரபியம் காடு மனிதர்களால் ஆக்கப்பூர்வமான விஷயங்களையும் செய்ய முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

serapium-forest

Related posts: