அறுவை சிகிச்சை நடத்தி கண் பார்வையை மீட்ட ரோபோ!

Saturday, September 10th, 2016

நோயாளி ஒருவரின் கண்ணுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, இயந்திர மனிதனை முதல் முறையாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பகுதி தடிமனான மிகவும் மெல்லிய படத்தை, இயந்திர மனிதனை வைத்து உரித்து எடுத்த பிறகு, அந்நபரின் ஒரு கண் பார்வை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த இயந்திர மனிதரின் கையிலிருக்கும் வடிகட்டிகள், மென்மையான செயல்முறைகளை மிகவும் துல்லியமாக செயல்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை நிறைவேற்றி இருக்கின்றன. கண் அறுவை சிகிச்சையில் புதிய காலத்தை இந்த அறுவை சிகிச்சை ஏற்படுத்தி இருப்பதாக, ஆக்ஸ்போர்டில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பேராசிரியர் ராபர்ட் மேக்லாரென் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய கண் பார்வையை மீட்டெடுக்க இயந்திர மனிதனை பயன்படுத்தி இருப்பது தேவதை கதைகளில் வருகின்ற நிகழ்ச்சிபோல உணர்வதாக நோயாளியான பில் பியவர் தெரிவித்திருக்கிறார்.

 160621102719_augmented_human_eye_digitised_640x360_thinkstock_nocredit

Related posts: