பச்சை குத்துவதனால் குருதி சார் நோய்கள் பரவும் அபாயம்!

Sunday, September 25th, 2016

டெட்டு என்று அழைக்கப்படும் பச்சைக்குத்துவதினால் குருதி சார்ந்த நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த நோய்கள் 3 விதமாக பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை பொதுச் சுகதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறியுள்ளார்.

தரமற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் பச்சைக்குத்தலே இதற்கு மிக முக்கிய காரணமாகும் தெரிவிக்கப்படுகின்றது.பச்சைக்குத்துவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மூலமே பெரும்பாலும் தொற்று நோய்கள் பரவும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஒருவருக்கு பச்சைகுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் மற்றொருவருக்கும் பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

viking-tattoo-30-650x650

Related posts: