அவுஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு: இக்கட்டான நிலையில் சீனா!

Monday, August 27th, 2018

இணைய வலையமைப்பின் புதிய யுகம் என கருதப்படும் 5G தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சிகள் சில நாடுகளில் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறிருக்கையில் தமது நாட்டு தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்களை தவிர வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இத் தொழில்நுட்பத்தினை உருவாக்குவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் சில நாடுகள் பின்னடித்து வருகின்றன.

இந்நாடுகள் வரிசையில் முன்நிலையில் காணப்படுவது அமெரிக்காவாகும்.

சீனா நாட்டு நிறுவனங்களுக்கு இத் தொழில்நுட்பத்தினை உருவாக்க அனுமதி அளித்தால் தமது நாட்டினை மொபைல் சாதனங்கள் ஊடாக இலகுவாக உளவுபார்க்க முடியும் என அமெரிக்கா கருதுகின்றது.

இதேபோன்றே அவுஸ்திரேலியாவும் தற்போது சீன நிறுவனங்கள் தமது நாட்டில் 5G தொழில்நுட்ப வலையமைப்பினை உருவாக்குவதற்கு அனுமதி மறுத்துள்ளது.

இதனால் Huawei மற்றும் ZTE நிறுவனங்கள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளன.

Related posts: