இரவு வானில் கண்டுபிடிக்கப்பட்ட புது வகையான ஒளி!

Wednesday, April 26th, 2017

இரவு வானில் தோன்றிய புதிய வகை ஒளியை அரோரா ஆர்வலர்கள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

கனடா கால்கரி பல்கலைக்கழகத்தின் எரிக் டொனோவன் என்பவர் இந்த ஒளியை கண்டுபிடித்துள்ளார்.குறித்த ஒளியை வகைப்படுத்தப்பட்டுள்ள தோற்றப்பாடு என உணராத நிலையில் அதற்கு புரோட்டான் வில் என குழுவின் ஏனையவர்கள் பெயரிட்டுள்ளனர்.

வளிமண்டலத்தின் உள்ள அதிக அளவிலான பகுதியிலுள்ள விரைவான உஷ்ண வாயு சூடான நீரோடமாக இருப்பதாக அரோரா குழுவினர் பரிசோதித்ததுள்ளனர்.

பூமியின் மேற்பரப்பில் 300 கிலோ மீற்றர் தூரத்தின் (190 மைல்கள்) அளவைக் கணக்கிடுவதற்காக மின் துளைப்பான் சாதனங்களை ஐரோப்பிய விண்வெளி மையம் (ESA)அனுப்பியது. இதன்போது, வெளியில் இருந்ததைவிட உள்பகுதியில் காற்றின் வெப்பநிலை 3,000 செல்சியஸ் (5,432F) சூடான வெப்பநிலையாக காணப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படங்களில் ஊதா நிறத்திலான ஒளி ஒன்று தோன்றுகின்றது. ஒப்பீட்டளவில் சிறிய அளவு கொண்ட இந்த ஊதா ஒளி பெரிய ஊதா ஒளியாக காட்சியளிக்கின்றது. ஆனால் அது பூமியின் காந்தப்புலத்தில் சூரிய துகள்களுடன் தொடர்புடைய தண்டு அல்லது அதுவொரு அரோரா இல்லை தோன்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இவ்வாறு கண்பிடிக்கப்பட்ட ஒளிக்கு குறித்த ஆர்வலர்கள் ஸ்டீவ் என பெயரிட்டுள்ளனர்.அரோரா என்பது வடதுருவமான ஆர்க்டிக் மற்றும் தென்துருவ அண்டார்க்டிக் பகுதிகளில் ஏற்படும் இயற்கை ஒளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: