ட்ரோன் டாக்ஸியை அறிமுகப்படுத்துகின்றது சீன நிறுவனம்!

Tuesday, June 14th, 2016

மக்களை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு ஆகாய மார்க்கமாக அழைத்துச் செல்லும் ட்ரோன் டாக்ஸியை சீன நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தவுள்ளது.

சீன நிறுவனம் தயாரித்துள்ள Ehang-184 எனும் ட்ரோன் டாக்ஸியை சோதிக்க அமெரிக்காவின் நெவடா மாகாண நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஒரே ஒரு நபரை ஏற்றிச்செல்லும் வசதிகொண்ட இந்த புதிய ட்ரோன் டாக்ஸியானது குறைந்த உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செல்போன் அப் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய இந்த ட்ரோன் செல்லவேண்டிய இடத்தை முன்பாகவே செல்போன் அப்பில் பதிவிட்டுவிட்டால் சரியான இடத்திற்கு குறித்த நேரத்தில் கொண்டு சேர்த்துவிடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts: