2050 இல் உலக மக்கள் தொகை 1000 கோடியைத் தாண்டுமாம்!

Tuesday, August 30th, 2016

 

இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளின் பங்களிப்புடன் 2050 ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள் தொகை 1000 கோடியை தாண்டும் என உலக மக்கள் தொகை பணியகம் நடத்திய ஆய்வின்மூலம் அறியப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை தற்போது 740 கோடியாக உள்ள நிலையில் 2050 ஆம் ஆண்டில் இது 1000 கோடியை எட்டும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 2050 ஆம் ஆண்டின்போது, ஆபிரிக்க நாடுகளின் மக்கள்தொகை 250 கோடியாகவும், அமெரிக்காவின் மக்கள் தொகை 120 கோடியாகவும் இருக்கும்.

ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 72 கோடியாகவும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் பங்களிப்பு 6.6 கோடியாகும் இருக்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை வளர்ச்சியில் அதிகபட்சமாக இந்தியா சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்களிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் வளர்ச்சி 530 கோடியாக இருக்கும். இந்தியா உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related posts: