திரைப்பட கதாசிரியர் பஞ்சு அருணாசலம் காலமானார்!

Tuesday, August 9th, 2016

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக, பாடலாசிரியராக மற்றும் இயக்குனராகவும் விளங்கிய பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று காலமானார்.  இறக்கும் போது அவருக்க 75.வயது.

காரைக்குடியில் உள்ள சிறுகூடல் பட்டியில் பிறந்த இவர், பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான கண்ணதாசனின் உதவியாளராக தன் வாழ்வை சினிமாத் துறையில் துவங்கினார்.1960-களிலிருந்து திரைப்படங்களுக்கு பாடல்களை எழுத ஆரம்பித்த பஞ்சு அருணாசலம், கலங்கரை விளக்கம், ஆறிலிருந்து அறுபதுவரை, தம்பிக்கு எந்த ஊரு, அன்னக்கிளி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார்.

30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை-திரைக்கதை எழுதியிருக்கும் பஞ்சு அருணாசலம், பல படங்களை இயக்கியிருப்பதோடு, 10-க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக விரைவில் வெளிவரவிருக்கும் முத்துராமலிங்கம் படத்தின் பாடல்களை எழுதியிருக்கும் பஞ்சு அருணாசலம் கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி இருந்தார். இவரது மகனான சுப்பு பஞ்சு அருணாசலம், தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துவருகிறார்.

Related posts: