முக்கிய தீவுகள் காணாமல் போகும் அபாயம் – ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்!

Friday, April 27th, 2018

பெருவெள்ளம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் அடுத்த 30 ஆண்டுகளில் உலகின் முக்கிய தீவுகள் அனைத்தும் காணாமல் போகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீப காலமாக ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாறுதல்களால் பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள பெரும்பாலான பவளத்திட்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் பாதியில் குடி நீர் ஆதாரம் மொத்தமும் காணாமல் போகும், அதே வரிசையில் தற்போது உலக சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும் சீஷெல்ஸ் மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட உலகின் முக்கிய தீவுகள் அனைத்தும் அடுத்த 30 ஆண்டுகளில் காணாமல் போகும் என அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி மே மாதம் 2015 வரை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

கடல் நீர் மட்டம் ஆபத்தான முறையில் அதிகரித்து வருவதால் குடி நீர் ஆதாரமும் மிக கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் மனிதர்களால் குடியிருக்க முடியாத நிலை ஏற்படும்.

இது 2030 முதல் 2060 ஆம் ஆண்டுவரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

வடமேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மார்ஷல் தீவுகள் நாட்டில் சுமார் 1,100 தீவு கூட்டங்கள் உள்ளன. மட்டுமின்றி 29 பவளத்திட்டுகளும் உள்ளன.

கடல் மட்டம் குறிப்பிட்ட வேகத்தில் உயர்ந்து வருவதால் மார்ஷல் தீவுகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

குறித்த எச்சரிக்கையானது மார்ஷல் தீவுகள் நாட்டுக்கு மட்டுமல்ல கரோலின், குக், கில்பர்ட், லைன், சொசைட்டி மற்றும் ஸ்ப்ராட்லி தீவுகள், மாலத்தீவு, சீஷெல்ஸ் மற்றும் வடமேற்கு ஹவாய் தீவுகள் என பட்டியல் நீளுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Related posts: