‘ஏலியன் வாகனம்’ – ஹிட்லர் சாதித்தது எப்படி..?!

Friday, August 5th, 2016

இரண்டாம் உலகப் போர் கடைசி மாதங்களில் உருவாக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்ட ஒரு ஜெர்மனி விமானம் தான் – ஹோர்ட்டன் ஹோ 229, அது ஒரு போர் விமான சோதனையாக அப்போது தெரிந்திருந்தாலும், அது ஒரு விண்கல சோதனையாகவே இப்போது தெரிகிறது. அந்த அளவிலான ஒரு முன்னோடித் தன்மையை அது கொண்டுள்ளது என்பதை இப்போது தான் அறிந்துகொள்ள முடிகிறது.

ஹோர்ட்டன் ஹோ 229 ஆனது, அது உருவாகி இருந்த காலத்தில் இருந்து அடுத்த பல தசாப்தங்களுக்கு (பல பத்தாண்டுகளுக்கு) பின்பு உருவாகி இருக்க வேண்டிய அதிநவீனத்துவம் கொண்டிருந்துள்ளது என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால் ஹோர்ட்டன் ஹோ 229 உருவாக்கமானது ஹிட்லரின் நாஸி படைகள் உண்மையில் ‘ஏலியன்கள்’ தானோ..? என்ற கேள்வியை எழுப்புகிறது..!

கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்க விமானத் தயாரிப்பு நிருவமான நார்த்ரோப் கிரம்மேன் (கோட்பாட்டளவில்) வருகின்ற நூற்றாண்டு யுத்தப் பிரதேசங்களில் பறக்கும் வல்லமை கொண்ட ஒரு எதிர்கால போர் விமானத்தின் புரட்சிகர வடிவமைப்பை வெளியிட்டது.

வல்லமை :

400x400_MIMAGE4143241aa761bcf60f41f763179c8aae

ஆனால் அந்த போர் விமான டிசைன் ஆனது ஒரு பறக்கும் தட்டு போல அதாவது விமான போக்குவரத்து நிபுணர்களின்படி ஒரு ‘ப்ளையிங் விங்’ அதாவது பாரம்பரியமான வால் துடுப்பு வடிவமைப்பு போல இருக்கிறது, இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் ஹோர்ட்டன் ஹோ 229 போல் இருக்கிறது.

பாரம்பரியமான வால் துடுப்பு :

400x400_MIMAGEcac87002b5c37ec8c4a53bbd461b2644

ஆரம்பத்தில் ரெய்மர் மற்றும் வால்டர் ஹோர்ட்டன் மூலம் வடிவமைக்கப்பட்டு, கோத்தர் வக்கோன்பாப்ரிக் என்பவரால் கட்டமைக்கப்பட்ட இந்த ஜெர்மன் முன்மாதிரி போர் / குண்டுதாரி விமானம் ஆனது மிக தாமதமாக இரண்டாம் உலகப் போரில் இறுதி நாட்களில் தான் உருவாக்கம் பெற்றது.

இறுதி நாட்களில் :

400x400_MIMAGEdc4d6dd16368ba584d72d9c34c3d4633

இவ்வகையான வடிவமைப்பானது விமானத்தின் அளவை குறைக்கும், மற்றும் ஒரு மென்மையான வடிவத்தை வழங்கும், முக்கியமாக ரேடார் சமிக்ஞைகளில் சிக்காமல் குதித்து குறைவான அளவில் கண்டறிய தகுந்த ரகசியத் தன்மை கொண்டிருக்கும்.

ரேடார் சமிக்ஞை :

400x400_MIMAGEaae29546eecc59963352ef1ff8a2000a

இப்படியான ஒரு அதிநவீனத் தன்மை கொண்ட ஒரு விமானம் இரண்டாம் உலகப் போர் கடைசி நாட்களில் கட்டப்பட்டது, ஜெர்மனி நாஸி படையால் பறக்கவிடப் பட்டது என்றால் எப்படி அது சாத்தியமானது..? அதன் பின்புலம் என்ன..? ஏலியன்களா.? அல்லது திறன்மிக்க எதிர்கால கணிப்புகள் கொண்ட நாஸி விஞ்ஞானிகளா.?

நாஸி படை, ஏலியன்களா..?

400x400_MIMAGEf1fa397f00b8f2eb12c065f163ed44c4

ஹோர்ட்டன் ஹோ 229 – விமான போக்குவரத்து வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு போல் இருக்கலாம். ஆனால், அதன் காற்றியக்கவியல் இரகசியங்களை (aerodynamic secrets) இதுவரையிலாக முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை.

காற்றியக்கவியல் இரகசியம் :

400x400_MIMAGEf1fa397f00b8f2eb12c065f163ed44c4

இன்னும் சொல்லப் போனால் பறக்க வைக்க முடியாத பண்புகளை கொண்ட ஹோர்ட்டன் ஹோ 229-யை எப்படி அதன் படைப்பாளிகள் பறக்க வைத்தனர், எப்படி கணிசமான காற்றியக்கவியல் சவால்களை சமாளித்தனர் என்பதை கண்டறிய நாசாவின் தலைமை விஞ்ஞானி ஒருவர் ஆய்வு செய்து வருகிறார்.

சவால்

400x400_MIMAGEde71b12916f802ae927d26a6728cdb81

வால் பகுதியானது விமானம் நிலையாக வைத்திருக்க உதவும் மற்றும் இரண்டு பக்கங்களிலும் ஆட்டம் கொள்ளாமல் வைத்திருக்க உதவும்.

வால் பகுதி :

400x400_MIMAGEb08b435880233ff5cafc085ef028cfd8

வால் அமைப்பை விட்டொழிப்பதின் மூலம் அந்த விமானமானது கட்டுப்படுத்த மிக கடினமான ஒன்றாக இருக்கும். அப்படியாக இயல்பாகவே பறக்க கடினமான ஒரு வடிவமைப்பை ஏன் அவர்கள் உருவாக்க வேண்டும்..?

விமானத்தின் நிலை :

400x400_MIMAGE6c4cc96757546ac762d1c892b7e754d8

அப்படியான பறக்கும் விமானம் வேலை செய்ய முடியும் என்றால், அதில் பல நன்மைகள் உண்டு, வால் பகுதி இல்லாததால் ரேடார்களில் அதிகம் சிக்காது, மென்மையான வடிவம் விமானத்தின் இழுவை சக்தியை அதிகரிக்கும்.

அதிகம் சிக்காது :

400x400_MIMAGE4b0c85b198a8639f1b21eab4edb3a5ab

அப்படியானால் இலகுவான மற்றும் எரிபொருள் திறன் மிக்கதாய் இருக்க முடியும், சாத்தியமான ஒரே என்ஜீனை பயன்படுத்தி ஒரு வழக்கமாக வடிவ விமானத்தை விட வேகமாக பறக்க வைக்க முடியும்.

எரிபொருள் திறன் :

400x400_MIMAGE9b5739334759ef81eb5696c8adbad582

ஆனால், இந்த திறன்கள் எல்லாம் சொல்வதற்க்கும் ஆய்வு காகிதங்களில் எழுதுவதற்க்கும் சுலபமானதாக இருக்கலாம் ஆனால் நிஜமாக்க மிகவும் கடினம்.

நிஜமாக்க மிகவும் கடினம் :

400x400_MIMAGE66f58373bce7037920a94126b82e6ed8

ஆனால், அதன் அனைத்து சிக்கல்களையும் ஜெர்மனின் ஹோர்ட்டன் சகோதரர்கள் சாதனைகளாய் மாற்றியது எப்படி என்பது மிகவும் சுவாரசியமான ஒரு ரகசியமாகவே இருக்கிறது.

சுவாரசியமான ஒரு ரகசியம் :

400x400_MIMAGE051d858612f95d91436454bbca4444cc

அதுவும் ஒரு 1000கிலோ எடையுள்ள வெடிப்பொருட்களை சுமந்து கொண்டு மணிக்கு 1000கிலோமீட்டர் வேகத்தில் 1000 மைல்கள் (1,600 கி.மீ.) வரையிலாக பறக்கும் வல்லமை கொண்ட ஒரு விமானம் எப்படி சாத்தியம்..?

400x400_MIMAGEe5219445652146c7d7bcc917e884d512

ஜெர்மனிய தொழில்துறைகள் மற்றும் நகரங்களை இலக்குகளாய் கொண்டு தாக்குதல் நடத்திய எதிரி நாடுகளின் விமானங்களை தாக்கி அழிக்க உருவான ஹோ 229 தான் ‘உலகின் முதல் ஸ்டீல்த் பாமர் (stealth bomber)’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

400x400_MIMAGEc66082876744fe92b3ed20c8d9761317

இதுபோன்ற பல சிக்கலான காரணங்களினால் தான் நாஸிகளுக்கும் ஏலியன்களுக்கும் தொடர்பு உண்டு என்பது போன்ற பல சதியாலோசனை கோட்பாடுகள் அனுதினமும் கிளம்பிக் கொண்டே இருக்கின்றனர்.400x400_MIMAGE4bc03ffb6b2589a3ae50f812b1acafd1 (1)

Related posts: