வாட்ஸ்அப்பில் மறையாக்க வசதி அறிமுகம்

Saturday, April 9th, 2016

வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப்படங்களை இனிமேல் யாரும் திருடவோ, இடைமறித்துப் பார்க்கவோ முடியாத வகையில், மறையாக்க வசதி (encryption) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வாட்ஸ்அப் குழு எண்ணிக்கை வரம்பு 100 இல் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், பயனாளர்களின் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் முதல்முறையாக encryption எனப்படும் மறையாக்க வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஒருவருக்கு அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப்படங்கள் என எதுவாக இருந்தாலும் யாரும் திருடவோ, இடைமறித்துப் பார்க்கவோ முடியாது.

புதிய வெர்ஷன் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவோர் இனிமேல் கவலையின்றித் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

வாட்ஸ்அப்பில் மறையாக்க வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பது உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளது. இது தீவிரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

ஆனால், வாட்ஸ்அப் நிர்வாகம் இந்த வசதியால் தீவிரவாதிகள் இனி தகவல்களைத் திருட முடியாது என அறிவித்துள்ளது

Related posts: