10 பில்லியன் ஒதுக்கீட்டில் இம்முறை 66,000 மெ.தொ. நெல் கொள்வனவு – அமைச்சரவைக்கும் நிதி அமைச்சு பத்திரம் சமர்ப்பிப்பு!

Saturday, February 4th, 2023

இம்முறை பெரும்போக நெல் கொள்வனவுக்காக அரசாங்கம் 10 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கவுள்ளதுடன் நெல் கொள்வனவுக்கான பொறுப்பை மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இம்முறை நெல் சந்தைப்படுத்தும் சபை மூலம் நெல் கொள்வனவு செய்யப்பட மாட்டாதென்றும் நெல் கொள்வனவுக்கான பொறுப்பை மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்முறை 66,000 மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி என இரண்டு மாதங்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தீபாவளி கொத்தணியொன்றை உருவாக்க வழிவகை செய்யாதீர் – வடக்கு மக்களிடம் சுகாதார பணிப்பாளர் வலியுறுத்து!
74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி - பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால...
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி போதுமானதாக இல்லை - சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதிகோரும...